பஹ்ரியாவிலிருந்து எட்டு வீரர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!
நூருல் ஹூதா உமர்
கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் கல்முனை கமுஃகமுஃஅல் பஹ்ரியா பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி வீரர்கள் இரண்டு தங்கம் ஒரு வெண்கலம் பெற்று எட்டு மாணவர்கள் தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகினர்.
கடந்த 05 தினங்களாக கந்தளாய் லீலாரத்தின மைதானத்தில் நடைபெற்று முடிந்த மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 16 வயதின் கீழ் பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயா மாணவனான எம். எம். எம். றிஹான் முதலாம் இடத்தினையும் 16 வயது கீழ் பெண்கள் பிரிவில் என். எப்.சஜா முதலாம் இடத்தினையும் பெற்று தங்கப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டனர்.
இதேவேளை 16 வயது கீழ் பெண்களுக்கான 4ஒ100 அஞ்சல் ஓட்ட நிகழ்ச்சியில் என். எப்.மின்ஹா, ஜெ. எப். லுபாப், என். எப்.சஜா, எம். எஸ். எப். சும்றா, எம். என். எப்.ஹிபா, ஆர். எப்.இனா ஆகியோர் வெண்கல பதக்கத்தையும், இருபது வயது கீழ் பிரிவில் ஏ. ஆர் எம். அப்ஹம் 200மீற்றர் , 400மீற்றர் போட்டி நிகழ்ச்சிகளில் நான்காவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், கல்முனை கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களில் மொத்தமாக எட்டு வீரர்கள் தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுநர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை