கொழும்பில் தட்டம்மை தீவிரம்: 52 நோயாளர்கள் அடையாளம்!
கொழும்பில் தற்போது வரையில் 52 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு சிகிச்சை, மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் கொழும்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
தட்டம்மை நோயானது தற்போது நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது. இது தொடர்பாக நாம் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். – என்று தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை