சைகைமொழி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி! மட்டக்களப்பில் நடந்தது
சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் புதன்கிழமை மாபெரும் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கண்கான சைகை மொழியாளர்கள், சமூக சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருள்மொழி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த பேரணி மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்றதுடன் அங்கு விசேட நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன
கருத்துக்களேதுமில்லை