நீதவான் ஒருவர் தனது தீர்ப்புக்காக கொலை மிரட்டலை எதிர்கொண்டால் அது பாரதூரமான விடயம் – அனுரகுமார
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதற்கான வெளிப்படையான விசாரணை இடம்பெறவேண்டும் என தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொலனறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மரணஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதிபதி தெரிவித்திருப்பது உண்மை என்றால் அது பாரதூரமான நிலைமை என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதவான் தெரிவித்துள்ள உண்மை என்றால் நாங்கள் எந்த நாட்டில் வாழ்கின்றோம் என கேள்வி எழுப்பியுள்ள அவர் தான் வழங்கிய உத்தரவிற்காக நீதவான் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்கி;ன்றார் என்றால் அது பாரதூரமான நிலைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதி தெரிவித்திருப்பது உண்மையில்லை என்றால் அதன் பின்னால் உள்ள சதி முயற்சியை கண்டறிவதற்கு விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை