தேசிய மட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

 

நூருல் ஹூதா உமர்

கலாசார அலுவல்கள் அமைச்சால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் பிரதீபா – 2023 தேசிய மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர் குழுவினர்கள் கிழக்கு மாகாணத்தில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றதுடன் கனிஷ்ட நடன நிகழ்ச்சியான ரபான், கோலாட்டம் போட்டியிலும், சிரேஷ்ட நிகழ்ச்சியான கோலாட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் கனிஷ்ட பிரிவு போட்டியில் ரபான் கோலாட்டம் குழுவினர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்கள்.

தேசிய போட்டிகள் பொல்கொல்ல மகாவளி கல்விக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. அதில் சிரேஷ்ட நிகழ்ச்சி கோலாட்டம் நடனகுழுவினர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அதேபோல் சித்திரம் வரைதல் தேசிய மட்டத்தில் எம்.எல்.எப். ஜியா மூன்றாம் இடத்தையும் ஜெ.றின்சான் ஆறுதல் பரிசினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இந்த வெற்றியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளர்களான சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம். அமீர் மற்றும் அவரோடு இணைந்து இந்த மாணவர்களை பாரம்பரிய முறையில் பயிற்றுவித்த மூத்த கலைஞர்களான எம்.ஐ. அலாவுதீன், எம்.எச். பைசர், ஏ. இஸ்ஸதீன், ஆசிரியர்களான எ.எல்.எம். ஸாஜி, ஐ. சியாம், எஸ்.எச்.எ.கபூர் மற்றும் இசை வடிவம் அமைத்த இசைக்கலைஞர் எம். அக்பர் ஆகியோர் உட்பட இந்த வெற்றிக்காகப் இரவு பகல் பாராது மிகவும் பாடுபட்டு பயிற்சியளித்து அனைவரினதும் வெற்றிக்கு பின்புலமாக இருந்த கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் அவர்களுக்கும், இவ்வெற்றிக்கு பின்புலமாக இருந்த சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களுக்கும் கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சபை செயலாளர் அஸ்வான் மௌலானா, கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சபை உபசெயலாளர் ஊடகவியலாளர் நூருல் ஹூதா உமர், சபை நிறைவேற்று உறுப்பினர்கள், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிர், மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி. நவ்ஸாத், எஸ். புவித்ரன் மற்றும் இம் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களோடு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.