மாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய கல்முனை கமுஃகமுஃ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டி தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் ,பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடசாலை முன்றிலில் வைத்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மாலைகள் அணிவித்து, பதக்கங்கள் அணிவித்து பாடசாலைக்கு அழைத்து வந்து பாராட்டிக் கௌரவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.