தருஷிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று  தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ” சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொடுத்த தனித்துவமான வெற்றியினால் நாடு மிகவும் பெருமையடைவதாகத்  தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அத்துடன் தருஷி நாட்டிற்கு வந்ததன் பின்னர் அவரைச் சந்திக்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இலங்கைக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.