‘நாய்’ என திட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் : சபையில் சீறிய டயானா கமகே

நாடாளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் கடும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சபையில் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்றும் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது, ​​ரஞ்சித் மத்தும பண்டார தன்னை ‘நாய்’ என திட்டியதாகவும் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் வாய்மொழி ஊடான துஷ்பிரயோகம் என்றும் தான் ஒரு பெண்ணாக தனியாக போராடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.