பயணிகளை ஏற்றுவதில் போட்டி : இரு பஸ்கள் மோதி 6 பேர் காயம்!

ஹொரணை, பல்லாபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி ஒருவரை பயணிகளும் பிரதேச மக்களும் தாக்கியதையடுத்து பொலிஸார் தலையிட்டு சாரதியை பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்டு கைது செய்துள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்கு பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டித்தன்மையே காரணம் எனக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.