நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கியதும் நாடாளுமன்றை கலைக்கவேண்டும் சுனில்ஹந்துநெத்தி ஆணித்தரம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கிய உடன் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான  தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அரசியல் தேவைகளுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவுள்ளது என்ற ஊகங்களுக்கு மத்தியில் ஜேவிபி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது என ஜேவிபியின் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு அவர்கள் நாடாளுமன்ற அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டு;ள்;ள அவர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டுவரும் அன்றே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானத்தையும் அவர்கள் கொண்டுவரவேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என ஜேவிபி நீண்டகாலமாகக் குரல்கொடுத்துவருகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும். ஆனால் அதன் போர்வையின் கீழ் நீங்கள் நாடாளுமன்ற அதிகாரத்தை தக்கவைக்க அனுமதிக்க முடியாது. ரணில்விக்கிரமசிங்கவிற்கு அதற்கான மக்கள் ஆணையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.