மண்சரிவு காரணமாக, மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக, கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி, 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மீரியபெத்தையில் முன்னதாக மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த 144 குடும்பங்களும், மஹகந்த பகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்களும், திவுல்கஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 81 குடும்பங்களும் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை