விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு கோரிக்கை

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவே விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவிடம் கோரிக்கை விடுத்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது குறித்த கோரிக்கையினை முன் வைத்தார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் அதில் முக்கியமாக இந்த ஏற்றுமதிக்கான தரச் சான்றிதழ் பெறுவதில் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றார்கள எனவும்; அந்த தர சான்றிதழை பெறுவதற்காக நீண்ட தூரம் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்டு தங்களுடைய தரச் சான்றிதழை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவே அதனை இலகுவான முறையில் தங்களுடைய ஏற்றுமதி தர சான்றிதழ் பெறுவதற்கு ஆவண செய்யுமாறும் வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.