அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்புக்கே தேர்தல் தேவை!  மனுஷ நாணக்கார சாடுகிறார்

அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தற்போது தேர்தல் அவசியமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

மக்கள் உண்மையில் தேர்தல் ஒன்றைக் கோருகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. மக்கள் தேர்தலை அன்றி, வரிசை யுகத்தை இல்லாது செய்து பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றே கோரியிருந்தார்கள்.

இதனை நாம் நிவர்த்தி செய்து வருகிறோம். ஆனால், தற்போது தேர்தலை கோருவதோ அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் தரப்பாகும்.

இவர்களின் வேண்டுகோளை விட, எமக்கு மக்களின் உயிரே முக்கியமாகும்.

நாட்டு மக்களுக்கு நிம்மதியாக சுவாசிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

அதேபோல, அவர்களின் வாக்குரிமையையும் நாம் பாதுகாப்போம். இது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை. – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.