இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்:  மட்டக்களப்பில் போராட்டம்!

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இஸ்ரேல் -பலஸ்தீன மோதல் காரணமாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கும் நிலைமையினை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இஸ்ரேல் – பலஸ்தீனம் எனும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானம் வரவேண்டும் என்றும் இனம், மதம், மொழி ஒற்றுமையினை சர்வதேச நாடுகள் உருவாக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் இரு நாடுகளுக்கும் ஆயுதங்கள் வழங்குவதை விடுத்து யுத்ததினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது. இவை தொடர்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.