புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்கு ஹற்றன் பஸ் தரிப்பிடம் கையளிப்பு!
ஹற்றன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த ஹற்றன் பஸ் தரிப்பிடம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், மழைக்காலங்களில் பஸ் தரிப்பிடத்தில் நீர் தேங்கி இருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த பஸ் தரிப்பிடத்தை புனரமைத்துத் தருமாறு மக்கள், சாரதிகள், நடத்துநர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையிலேயே, இது புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை