ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்!

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன.

குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார்.

இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண்  குழந்தைகள் பிறந்துள்ளமை இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு இது முக்கிய தருணமாகும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அரிய மற்றும் விலைமதிப்பற்ற பிறப்புகள் வாழ்க்கையின் அற்புதங்களுக்கும், சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்புக்கும் சான்றாக  விளங்குகின்றன. என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.