94 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் தலைமன்னாரில் மீட்பு

கடற்படையினரால் தலைமன்னார் – உருமலை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (16) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 4 கிலோ கிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருள், 1 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ கிராமுக்கும் அதிக ஹசீஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 94 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். போதைப்பொருட்கள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.