லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம்! வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தில் நடந்தது
லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் சுன்னாகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
லயன்ஸ் கழக வெள்ளைப் பிரம்புதின மாவட்ட இணைப்பாளர் லயன் மகாதேவா பிரிதுவிராஜாவின் ஒழுங்கமைப்பில் ஆளுநர்சபை ஆலோசகர் லயன் சி.ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம். பீற்றர் – சாவித்திரி தம்பதிகள் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
வெள்ளைப் பிரம்புதின விழிப்புணர்வுப் பேரணி காலை 9 மணிக்கு சுன்னாகம் கொமர்சல் வங்கிக்கு முன்பாக ஆரம்பித்து, சுன்னாகம் பஸ் நிலையத்தைச் சென்றடைந்து அங்கு வெள்ளைப் பிரம்பு தொடர்பான விழிப்புணர்வு உரை வாழ்வகத் தலைவர் ஆ.இரவீந்திரனால் ஆற்றப்பட்டு மீண்டும் பேரணி புறப்பட்;டு வாழ்வகத்தைச் சென்றடைந்து அங்கு பொதுக் கூட்டமும் சேவைத் திட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் முன்னாள் ஆளுநர் ஆர்.எல்.ராஜ்குமார், ஆளுநர்சபை செயலாளர் பிரனித் பீரிஸ் உட்பட 100 இற்கு மேற்பட்ட லயன்ஸ்கள் கலந்துகொண்டனர்.
இந்த வெள்ளைப் பிரம்புக்கு சர்வதேச ரீதியில் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது அமெரிக்காவில் உள்ள லயன்ஸ் கழகத்தினரே என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை