இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன, ஸ்வர்ணாதிபதி மற்றும் ஏ. மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இது தொடர்பான தீர்ப்பை இன்று (18) அறிவிக்கவிருந்தது.
ஆனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.
இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்ததுடன் டயானா கமகே ஒரு பிரித்தானிய பிரஜை என மனுதாரர் கூறியிருந்தார்.
கருத்துக்களேதுமில்லை