நுகேகொடையில் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி, நடத்துநர் தப்பியோட்டம்!
நுகேகொடையில் பஸ் ஒன்றும் ஜீப் ஒன்றும் மோதிக்கொண்ட சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோமாகமவிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது முன்னால் வந்த ஜீப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை