கஜன் மற்றும் சுலக்சனின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலைகழக வளாகத்தில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில், உயிரிழந்த மாணவர்களின் உருவ படத்திற்கு, பல்கலை மாணவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

விஐயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 20ஆம் திகதி இரவு, கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.