நாட்டின் சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாடாளுமன்றில் உடன்படிக்கை! சன்ன ஜயசுமண தெரிவிப்பு
நாட்டில் நிலவும் சுகாதாரத் துறை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதன்கிழமை விசேட கூட்டம் ஒன்று நடத்திய போதே ஜயசுமண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
நாட்டின் சுகாதாரத் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் பல்வேறு உடன்படிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை