4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் 100 கோடி ரூபா கோருகிறார் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர!

பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் 100 கோடி ரூபா கோரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர,  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில்   பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஸாந்த மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியசட்கர்  நெவில் சில்வா  ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தன்னைக் கைது செய்தமை தவறானது என சுட்டிக் காட்டியே 100 கோடி ரூபா கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.