பொலிஸாருக்கு துபாயில் இருந்து உயிர் அச்சுறுத்தல் : சாமர சம்பத்!

பொலிஸ் விளக்கமறியலில் இருந்த கடந்த சில வருடங்களில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளதாக எதிரணி பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபரின் பதவி காலம் நீடிப்பு குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்து முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் பேரவை இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி உள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பொலிஸார் தொடர்பாக பெரும் ஏமாற்றம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

எனினும், இதற்கு பதிலளித்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், தற்போது தென் மாகாணத்தில் பொலிஸாரால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறி பொலிஸார் பலர் இடமாற்றம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு துபாயில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் வரும் வகையில் அழைப்புகள் வருகின்றதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதனால், தெற்கில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாதளவுக்கு பொலிஸார் நெருக்கடியில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.