டயனா கமகே கூறியமை பொய்க்குற்றச்சாட்டு காணொளியும் உள்ளது என்கிறார் லக்ஷ்மன்
டயனா கமகேவல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாம் சபையில் இல்லாதபோது, டயனா கமகேவால், எமது உறுப்பினர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாம் சபாநாயகரை சந்தித்தோம்.
காணொளியையும் காண்பித்துள்ளோம். இதன்போது, யார் அநாகரீகமாக நடந்துக் கொண்டது மற்றும் யார் கைப்பையால் தாக்குதல் நடத்தியது என்பதை சபாநாயகரிடம் தெளிவாகக் காண்பித்துள்ளோம்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறும் கூறியுள்ளோம். இந்த குற்றச்சாட்டை மறுக்கிறோம். நாடாளுமன்றதிற்கு உள்ளே நடந்த பிரச்சினையென்பதால், சபாநாயகர் இதற்கான தீர்வை வழங்க வேண்டும். – எனக் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை