அரசியல் தந்திரங்கள் வேண்டாம் பேச்சு ஒன்றே போதுமானதாம்! டக்ளஸ் கருத்து

ஆயுதப் போராளியாக ஒருகாலத்தில் செயற்பட்ட தான் பேச்சுகள் மூலமே தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்பதைப் புரிந்துகொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெற்ற கடல்சார் ஒத்துழைப்பிற்கான கருப்பொருள் எனும் தொணிப் பொருளில் கடந்த 18 ஆம் திகதி சீனாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பெல்ட் அன் றோட் எனப்படும் சீனாவால் உருவாக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தொடர்பாடல் முயற்சியின் ஒரு பகுதியாக இடம்பெற்ற குறித்த மூன்றாவது சர்வதேசக் கலந்துரையாடலில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களைப் புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.