யாழ். மாவட்ட வலைப் பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டசெயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிpழமை இடம்பெற்றது.
இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சங்கத்தால் பதுளை மாவட்டம் பண்டாரவளையில் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுழற்சி முறை மற்றும் விலகல் முறை போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலக அணி சார்பாக பங்குபற்றி 05 போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீர, வீராங்கனைகளுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் , மாவட்ட, பிரதேச செயலக பயிற்றுவிப்பாளர்கள், வெற்றீட்டிய வீர, வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை