விற்பனை நிலையத்தில் நச்சு புகை: 10 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு!

தலவாக்கலை பிரதேசத்தில் நச்சு புகையை சுவாசித்ததன் காரணமாக 09 பெண்களும் ஓர் ஆணும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஆடை மற்றும் அலங்காரப் பொருள்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து தலவாக்கலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய நச்சு புகை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.