புயலால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு யாழில் வலைகள் வழங்கி வைப்பு!
மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் நண்டு வலைகள் வழங்கப்பட்டன.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. ஜாட்சன் பிகிராடோ, மெசிடோ நிறுவன பணியாளர்கள், யாழ். மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுப்பிரமணியம் சிவகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 52 பயனாளிகளுக்கு தலா 45 ஆயிரம் ரூபா பெறுமதியான நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை