பீடி கைத்தொழிலை முறையாக நடத்துவதற்கு யோசனை

நாட்டில் பீடி கைத்தொழிலை முறையாக நடத்துவதற்கு புதிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று அதற்கான கொள்கை நடவடிக்கை நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு கிலோ பீடி இலைக்கு அறவிடப்படும் 5000 ரூபா செஸ் வரியை நீக்குமாறும் கலந்துரையாடலில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்படும் 5000 ரூபாய் செஸ் வரியுடன் சேர்த்து, ஒவ்வொரு பீடியிலிருந்தும் 2 ரூபாய் வீதத்தை அரசாங்கம் வசூலிக்கிறது.

மது வரித் திணைக்களம் இந்த முறையை அறிமுகப்படுத்திய போதிலும் அது சரியாக செயற்படவில்லை என இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு கிலோ பீடி இலைக்கு அறவிடப்படும் செஸ் வரி காரணமாக அதிகளவான பீடி இலைகள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பீடி தொழிலை சீரமைத்து, மதுவரித் திணைக்கள துறையின் செயல்பாடுகளை சீரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.