மானை வேட்டையாடி வாகனத்தில் கொண்டு சென்ற 3 பேர் கைது
ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் மான் ஒன்றை வேட்டையாடி, அதனை உயிரற்ற நிலையில் வாகனத்தில் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் ஒன்றை வேட்டையாடி வாகனத்தில் கொண்டு செல்வதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் குறித்த பகுதியில் தேடலில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பொலிஸார் நடத்திய வாகன சோதனையின்போது, குறித்த வாகனத்தில் மான் ஒன்றை வேட்டையாடி, அதனை உடலை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் இன்று (22) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஜயசிங்க தெரிவித்தா
கருத்துக்களேதுமில்லை