தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பெயரில் சேகரித்த நிதி முழுமையாக தெல்லிப்பழைக்கே! லயன்ஸ் கழக ஆளுநர் அவையில் இறுதி முடிவு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு என சர்வதேச லயன்ஸ் கழகத்தால் வழங்கப்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் ரூபாவும் வைத்தியசாலையின் பெயரைப் பயன்படுத்தி உள்ளூரில் சேகரிக்கப்பட்ட 52 லட்சம் ரூபாவும் முழுமையாக வட்டியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே வழங்குவது என இறுதிசெய்யப்பட்டது.

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இனது 2 ஆவது ஆளுநர்சபைக் கூட்டம் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் தலைமையில் கடந்த 14 ஆம் திகதி கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக லயன்ஸ் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

சர்;வதேச லயன்ஸ் கழகங்களால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோயாளர்களின் விடுதி கட்டில்கள் ஒவ்வொன்றுக்கும் ஒட்சிசன் பொருத்துவதற்கென, சர்வதேச லயன்ஸ் கழகத்தால் வழங்கப்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் ரூபாவும் உள்ளூர் கொடையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 51 லட்சம் ரூபாவுமாக மொத்தம் ஒரு கோடியே 91 லட்சம் ரூபாவில் சேவைத்திட்டம் முடிவுறுத்தப்பட்டு மீதமாக உள்ள 42 லட்சம் ரூபாவை கடந்த ஆண்டு ஆளுநர் வைத்தியர் அநோமா விஜயசிங்கவால் முறைகேடாக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்ற எடுக்கப்பட்ட முயற்சி நேர்மைத்திறன் கொண்ட சில லயன்ஸ்களால் தடுக்கப்பட்டது. இதன் இறுதிமுடிவு பல ஆளுநர் சபைக்கூட்டங்களில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று முடிவேதுமின்றி கூட்டம் நிறைவுற்றாலும் கடந்த 14 ஆம் திகதி கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற ஆளுநர் அவையில் இறுதியான முடிவு எடுக்கப்பட்டு, அந்த நிதி முழுமையாக வட்டியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே வழங்குவது என்று இறுதிசெய்யப்பட்டது.

இந்த முறைகேடான நிதி மாற்றத்துக்கு எதிராக நேர்மையாகக் குரல்கொடுத்த 4 உறுப்பினர்களுக்கு எதிராக லயன்ஸ் கழகத்தால் ஒழுக்காற்று நடவடிக்;கை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.