பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், முக்கிய விடயங்கள் குறித்தும் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.
நட்புரீதியான இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெரன் வூட்ஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (05)
கருத்துக்களேதுமில்லை