வவுனியாவில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!

வவுனியா, புளியங்குளம் வடக்கு முத்துமாரிநகர் மக்கள் இணைந்து ஐந்து அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தை வியாழக்கிழமை காலை முன்னெடுத்தனர்.

இதன்போது ‘வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும், புளியங்குளம் வடக்கு கிராம சேவகரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதேச செயலாளர் பதில் வழங்காமைக்குரிய காரணம் என்ன?, 15 வருடங்களாக முத்துமாரி நகர் ஏ புளக் காணிகளுக்கு காணிப்பத்திரம் வழங்காமைக்குரிய காரணம் என்ன?, எந்தவிதமான குற்றச்செயல்களும் இல்லாமல் எட்டு இளைஞர்களை நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமைக்கான காரணம் என்ன? என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை  தமது ஐந்து அம்சக் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் வரை குறித்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.