அதிக போதை பாவனையால் உடுவிலில் ஆண் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் –

குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வியாழக்கிழமை காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை. இந்நிலையில் தாயார் கதவைத் திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இந்நிலையில் தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருள்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.