எந்தவொரு பிரச்சினைக்கும் போர் உரிய தீர்வு ஆகாதாம்! அமைச்சர் ஜீவன் இடித்துரைப்பு
பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை காணும்போது கவலையளிக்கின்றது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன் தூதரகத்துக்கு சென்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட் ஐ சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சருடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதி தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.இராஜதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
போரில் உயிரிழந்த மக்களுக்கு தமது அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார்.
பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கை மக்கள் உள்ள நிலைப்பாட்டிலேயே தானும் இருப்பதாகவும், எந்தவொரு பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களேதுமில்லை