சகல உரிமைகளுடனும் மலையக மக்கள் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்து
இலங்கையை வாழவைத்த மலையகத்; தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘நாம் 200’ எனும் தேசிய நிகழ்வுக்கு வழங்கியுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பக்காலம் முதல் திராவிட முன்னேற்றக்கழகம் குரல் கொடுத்து வருவதாகவும் தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மலையகத் தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் மலையகத் தமிழர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும் போல கல்வியிலும், பொருளாதார ரீதியிலும் முன்னேற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை