காகிதத்தில் கப்பல் விட்ட 14 மாத குழந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது!

மதுரங்குளிய பிரதேசத்தில் நீரோடை ஒன்றில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை, சக்கரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில், அவரது தாயார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு, புத்தளம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மதுரங்குளிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதுரங்குளி சிங்கள மகா வித்தியாலயத்துக்கு  அருகில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் ஒரு வயதும் இரண்டு மாதமுமான குழந்தையே காகித ஓடம் ஒன்றை நீரில் விடும்போது நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன்போதே நீரில் காணப்பட்ட சக்கரம் ஒன்றில் சிக்கிய நிலையில், அவரது தாய் மற்றும் அயலவர்களால் குழந்தை மீட்கப்பட்டிருந்தது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.