இலங்கை கிரிக்கெட் சபைக்குச் செல்லும் வீதிக்கு பூட்டு
இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) முன்பாக உள்ள வீதியை இன்று வியாழக்கிழமை (09) தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, டொரிங்டன் சந்தியில் உள்ள மைட்லாண்ட் வீதியிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில் பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை