பாக்.உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : 16 வருடங்களின் பின்னர் மூவரும் விடுதலை !
இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முதலாவது பிரதிவாதியாக யோகராஜா நிரோஜனும் இரண்டாம் பிரதிவாதியாக சுப்பிரமணியம் சுரேந்திரராஜாவும் மூன்றாம் பிரதிவாதியான கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதனால் மூவரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளின் கீழ் 25 குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை