சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கைகள்! அமைச்சர் ரமேஷ் பத்திரண உத்தரவாதம்

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் நிலவும்  வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேநேரம் நாடளாவிய  ரீதியில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இம்ரான் மஹ்றூப் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

விசேட மருத்துவர்கள் மற்றும் வைத்தியர்கள்  நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையால் நாட்டில் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளிலும் மருத்துவர்களுக்கான குறைபாடு காணப்படுகிறது.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் வைத்தியர்  உள்ளிட்ட சுகாதாரத்துறை வெற்றிடங்களில் உடனடியாக முழுமையாக நிரப்புவதற்கு முடியாவிட்டாலும் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முடிந்தளவில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சிக்குப் பின்னரான டாக்டர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் போது திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். – என்றார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.