நானு ஓயா மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கல்! ஜீவனின் ஏற்பாட்டில்
நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான தபால் பெட்டியும் வழங்கப்பட்டது.
நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்துவந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை