சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய 20 சிறுமிகள் : அமைச்சர் கீதா குமாரசிங்க!
சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறுவர்கள் இல்லங்களில் இருக்கும் துஸ்பிரயோகத்திற்குள்ளான 169 பிள்ளைகள் இந்த வருடத்தில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
26 சிறுவர்கள் கர்ப்பிணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 13 சிறுவர்களை மலேசியாவிற்கு கடத்தி;சென்று உலகம் முழுவதும் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பில் நாங்கள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.
குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பில் தேடிப்பார்த்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இன்று உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் சிறுவர் இல்லங்களை கண்காணிக்கும் நடவடிக்கை மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் நன்னடத்தை மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேபோன்று பிரதேசங்களுக்கு பொறுப்பான நன்னடத்தை அலுவலக அதிகாரிகளாலும் சிறுவர் இல்ல காண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை