யாழ்.புனித சாள்ஸ் வித்தி. மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தால் பாடசாலை உபகரணம்!
யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகா வித்தியாலய தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கல்லூரி முதல்வரும் லயன்ஸ் கழக ஆளுநர் சபை உறுப்பினருமான லயன் கே.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை உபகரணங்களை, மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர், அகில இலங்கை லயன்ஸ் கழகங்களின் முன்னாள் தலைவர் லயன் தேவா டி பீற்றர், முன்னாள் ஆளுநர் லயன் எஸ்.எஸ்.தங்கராஜா ஆகியோர் கலந்து மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர்.
லயன்ஸ் கழக ஆளுநர் சபையின் ஆலோசகர் லயன் ஐ.மயூரதனின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இந்த உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை உரும்பிராய் லயன்ஸ் கழகமும் யாழ்ப்பாணம் நகர லயன்ஸ் கழகமும் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை