கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் உடன் அழிக்கப்பட்டு விடுகின்றனவாம்! தேசபந்து தென்னக்கோன் விளக்கம்
பொலிஸாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
‘பொலிஸாரால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கின்றது என்ற மாபெரும் பிரச்சினை பொதுமக்களுக்கு இருக்கின்றது.
குறித்த போதைப்பொருள்கள் மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளைச் சென்றடைகின்றது என்ற பிழையான கருத்தும் மக்களிடையே காணப்படுகின்றது.
அதேபோன்று இவ்வாறான சில சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
ஆனால் இதன் பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மிகவும் குறுகிய காலத்தில் அழித்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை