இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுக்கின்றார் ஜனாதிபதி! சபா.குகதாஸ் சாட்டை
ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் இலங்கையைப் பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுக்கும் செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாய திட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கானது அல்ல என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவை அரசியல் அமைதி உடைய, ஊழல் அற்ற ஆட்சியாளர்களைக்; கொண்ட நாடுகளுக்கே பொருத்தமானது என்றும் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தலைகீழாக கிடைக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த முதலில் இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் அதேநேரம் ஊழல் வாதிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை