கதிரானவத்தை குணா’ மட்டக்குளியில் கைது!
மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் வியாழக்கிழமை போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கதிரானவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ‘கதிரானவத்தை குணா’ என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது 22 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைதானவரை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது குறித்த போதை பொருள் சுமார் ஆறு லட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், கைதானவர் ஏற்கனவே ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை