மூன்று கிலோ ஐஸ் போதையுடன் வத்தளையைச் சேர்ந்தவர் கைது!

மூன்று கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு புத்தளம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த  நபர் கற்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  பஸ்ஸொன்றில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்று பாலாவியிப் பகுதியில் இறங்கி மற்றொரு பஸ்ஸொன்றில் போதைப்பொருளை கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து  அவர் பயணித்த பஸ்ஸை குறிஞ்சிப்பிட்டி பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டபோது  சூட்சமமான முறையில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ  ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பொலிஸார் கைப்பற்றினர்.  இதன் பெறுமதி 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.