ஐக்கியங்களின் போர் 2024 தென்மராட்சியில் நடந்தது!
தென்மராச்சி ஐக்கியங்களுக்கு இடையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சாவகச்சேரி ஐக்கிய அணியினர் கிண்ணத்தை தனதாக்கிகொண்டனர் .
இந்தத் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக சாவகச்சேரி ஐக்கிய அணியை சேர்ந்த யதுவும்,சிறந்த பந்து வீச்சாளராக சாவகச்சேரி ஐக்கிய அணியை சேர்ந்த நிதர்சனும் சிறந்த பந்துத் தடுப்பாளராக சாவகச்சேரி ஐக்கிய அணியைச் சேர்ந்த தனுஸூம் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
சாவகச்சேரி லவ்லி கூல்பார் முன்றிலில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன, சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மற்றும் சூழகம் அமைப்பு இணைப்பாளர் கருணாகரன் குணாளன் ஆகியோர் கலந்து கொண்டு
வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
கைதடி ஐக்கியம், நாவற்குழி ஐக்கியம், மட்டுவில் ஐக்கியம்,சாவகச்சேரி ஐக்கியம் ஆகிய நான்கு அணிகள் இப்போடியில் பங்குபற்றியிருந்தன. இறுதிப் போட்டிக்கு மட்டுவில் ஐக்கியம், மற்றும் சாவகச்சேரி ஐக்கிய அணிகள் தகுதி பெற்றன.தொடர்சியாக 5 ஆவது வருடம் நடைபெறும் இப்போடியில் முதல் மூன்று வருடமும் கைதடி ஐக்கிய அணியும் கடந்த வருடமும் இவ்வருடமும் சாவகச்சேரி ஐக்கிய அணியும் கிண்ணங்கள் வென்றமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துக்களேதுமில்லை