தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தால் சாதனையாளர் கௌரவம்!
தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தால் திங்கட்கிழமை தைப்பொங்கல் தினத்தன்று மாலை சாவகச்சேரி-மட்டுவிலைச் சேர்ந்த உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கே.சஜிதரன் தலைமையில்,சாவகச்சேரி லவ்லி கூல்பார் முன்றிலில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனையாளருக்கான கௌரவம் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி வைத்திருந்தனர்.
மட்டுவிலைச் சேர்ந்த 60 வயதான திருச்செல்வம், தைப்பொங்கல் தினத்தன்று 1550கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியின் பலத்தால் 19 நிமிடங்களில் 1500 மீற்றர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநாட்டியிருந்த நிலையில் தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக மேற்படி கௌரவம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை